Latestமலேசியா

எட்டு மாத காத்திருப்புக்கு பின் வாங்கிய இரண்டு மணி நேரத்திலே விபத்துக்குள்ளானது புதிய கார்

சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில், எட்டு மாதங்கள் காத்திருப்புக்கு பின், புதிய காரை ஓட்டிச் சென்ற குடும்பத்தாரின் உற்சாகம் சோகத்தில் முடிந்தது.

வாங்கிய இரண்டு மணி நேரத்திலேயே அந்த புதிய புரோடுவா அல்சா கார் விபத்துக்குள்ளானதே அதற்கு காரணம்.

விபத்துக்குள்ளான காரின் புகைப்படத்தோடு, அந்த சோகக் கதையை ஈ சியா என்பவர், Perodua Alza D27A எனும் முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இம்மாதம் 13-ஆம் தேதி, கோலாலம்பூரில் காரை பெற்றுக் கொண்டு ஜொகூர் திரும்பும் வழியில் சம்பந்தப்பட்ட காரின் உரிமையாளர் விபத்தில் சிக்கினார்.

புதிய காரை ஓட்டத் தொடங்கிய இரண்டு மணி நேரத்திலேயே அது விபத்துக்குள்ளானது. அதனால், காரின் முன்பகுதியும், பின் பகுதியும் மோசமாக சேதமடைந்த வேளை ; கண்ணாடிகளும் உடைந்து நொருங்கின.

அந்த விபத்து குறித்து, இணைய பயனர்கள் பலர் தொடர்ந்து அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!