கோலாலம்பூர், மார்ச் 3 – உக்ரைய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு நடத்தியதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயு விலையேற்றம் கண்டுள்ளதால் மலேசியா நன்மையடையக்கூடும்.
எனினும் நீண்ட நாட்களுக்கு அந்த நன்மை இருக்காது என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். விலையேற்றத்தினால் எண்ணெய் மற்றும எரிவாயுவின் மொத்த ஏற்றுமதி நாடு என்ற முறையில் மலேசியா நன்மையடைய முடியும் என Asia School of Bussiness சின் உதவி பேராசிரியர் Renato Lima de oliveira தெரிவித்தார்.
உள்நாட்டிலும் உலகளாவிய நிலையிலும் எண்ணெய் விலை உயர்வினால் பெட்ரோனாசும் அதிகமான வருமானத்தை பெறமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.