Latest

எண்ணெய் நிலையத்தில் கொள்ளை; ஒரு மணி நேரத்துக்குள் கையும் களவுமாகப் பிடிபட்டான் கொள்ளையன்

ஜெலெபு, ஆகஸ்ட் 16 – நெகிரி செம்பிலான், ஜெலெபு (Jelebu)விலுள்ள எண்ணெய் நிலையமொன்றில் கொள்ளையடித்துத் தப்பியோடிய ஒரு மணி நேரத்துக்குள் கொள்ளையன் போலீசாரிடம் சிக்கினான்.

ஆளில்லா சமயம் பார்த்து எண்ணெய் நிலையத்துக்குள் புகுந்த 39 வயது ஆடவன், வெட்டறிவாளைக் காட்டி எண்ணெய் நிலைய ஊழியரிடம் 200 ரிங்கிட்டைக் கொள்ளையடித்து, காரில் அங்கிருந்துத் தப்பியோடியிருக்கின்றான்.

தகவல் கிடைக்கப்பெற்று சம்பவத் தளம் விரைந்த போலீசார், அவ்வாடவனை அயேர் பானிங் (Air Baning) சாலை சந்திப்புப் பகுதியில் கைது செய்திருப்பதாக ஜெலெபு மாவட்ட போலீஸ் தலைவர் துணை சுப்ரிண்டண்டன் மஸ்லான் உடின் (Maslan Udin) தெரிவித்தார்.

கொள்ளையடித்த பணத்தை மீட்ட போலீசார், கொள்ளை நடவடிக்கையின் போது பயன்படுத்தியது என நம்பப்படும் வெட்டறிவாளையும் அவனிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். தற்போது அவ்வாடவன் விசாரணைக்காக வரும் 21ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மஸ்லான் உடின் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!