லுக்குட், பிப் 17 – எண்ணெய் நிலையத்தில் எண்ணெய் நிரப்பிக் கொண்டிருந்த போது, நகைக் கடை உரிமையாளர் ஒருவரை , பாராங்கத்தி ஏந்திய ஐவர் கொள்ளையிட்டு சென்றனர்.
போர்ட் டிக்சன் Lukut –டில் நிகழ்ந்த அந்த சம்பவத்தில் , கொள்ளையர்கள், நகைகள் இருந்த 3 பைகளையும், ரொக்கம் மற்றும் பத்திரங்களையும் திருடிச் சென்றதாக, போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் Aidi Sham Mohamed தெரிவித்தார்.
பின்னர் அந்த கொள்ளையர்களை, நகைக் கடை உரிமையாளர் துரத்திச் சென்றுள்ளார். அப்போது கொள்ளையர்கள் ஓட்டிய காரொன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
கவிழ்ந்த அந்த காரிலிருந்து, இரு நகைப் பைகள் மீட்கப்பட்ட வேளை, கொள்ளையர்கள் தப்பித்து சென்று விட்டதாக Aidi Sham Mohamed குறிப்பிட்டார்.