
மெக்சிக்கோ சிட்டி- மார்ச் 17 – போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட தகராறின்போது எண்மரை சுட்டுக்கொன்ற 14 வயது பையனை மெக்சிக்கோ போலீசார் கைது செய்தனர். மெக்சிக்கோ சிட்டியின் புறநகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த பையன் அவ்வீட்டிலுள்ளவர்களை ஒருவர் பின் ஒருவராக சுட்டுக்கொன்றதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அதோடு போதைப் பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அந்த பையனுடன் தொடர்புள்ள மேலும் எழுவர் கைது செய்யப்பட்டனர்.