புதுடில்லி, பிப் 18 – எதிர்காலத்தில் தொற்று நோய்களை எதிர்க்கொள்வதற்கு அனைத்துலக பண நிறுவனம் உட்பட பன்னாட்டு நிதியை அதிகரிப்பதற்கு ஜி 20 பொருளாதார அமைப்பைப் சேர்ந்த நாடுகள் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியா அறைகூவல் விடுத்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிடம் உலகளாவிய நிதி ஆதரவை வழங்குவதற்கு போதுமான வளங்கள் இல்லை. எனவே பொருளாதார ரீதியில் வளமாக இருக்கும் ஜி 20 அமைப்பின் நாடுகள் நிதியுதவி வழங்க வேண்டும் என இந்திய நிதியமைச்சர் Nirmala Sitharaman கேட்டுக்கொண்டார்.
இந்தோனேசியாவில் இணைய வாயிலாக நடைபெற்ற ஜி 20 அமைப்பின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.