
கோலாலம்பூர், ஜன 5 – தேசிய முன்னணி உட்பட இதர கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதற்கான சாத்தியத்தை பெரிக்காத்தான் நேசனல் கொண்டிருப்பதாக அதன் தலைமைச் செயலாளர் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்திருக்கிறார். எனினும் மற்றொரு Muafakat Nasional- லுக்கான ஆலோசனையை தாம் குறிப்பிடவில்லையென அவர் கூறினார். அந்த உத்தேச கூட்டணியில் இணைவதற்கு முன்பு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இதற்கு முதலில் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என Hamzah தெரிவித்தார். Parti Pribumi Bersatu Malaysia, Pas மற்றும் அம்னோ ஆகிய அனைத்து உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும் கூட்டணிக்கான கொள்கைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என அவர் கூறினார். ஒரே நோக்கத்தை அவர்கள் நம்புவதாக இருந்தால் புதிய கூட்டணியை கொண்டிருப்பதில் தவறு ஏதும் கிடையாது என்றும் Hamzah விவரித்தார்.