Latestஉலகம்

எதிர்கால கணவர் மாயம் ; மாமனாரை கரம்பிடித்த பெண்ணால் பரபரப்பு

இந்தோனேசியா, செப்டம்பர் 4 – திருமண நாள் அன்று மணமகன் திடிரென ஓடி விட்டதால், அவனை மணமுடிக்கவிருந்த மணமகள் தனது மாமனாரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண் திருமணம் செய்துக் கொள்ளவிருந்த ஆடவர், திருமண சடங்குகள் தொடங்குவதற்கு முன்னரே காணாமல் போனான்.

மகன் மாயமானதால், அவனது தந்தை அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு, மனமுடைந்து காணப்பட்ட சம்பந்தப்பட்ட பெண்ணை கரம்பிடித்தார்.

மருமகள் ஆக வேண்டிய பெண்ணை, மாமனாரே கரம் பிடித்த காணொளி வைரலாகி, பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அச்சம்பவம் குறித்து அறிந்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு விரைந்த மணமகளின் சகோதரன், பல ஆண்டுகளாக காதலித்து வந்த மணமகன் காணாமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாகவும், அதனால் தனது குடும்பத்திற்கு தலைகுனிவு மட்டுமே மிஞ்சியதாகவும் சினத்துடன் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!