
கோலாலம்பூர், அக் 3 – எதிர்க்கட்சிகள் கடுமையான குறைகூறல்களை தெரிவித்து வந்தாலும் அடுத்த பொதுத் தேர்தல்வரை தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இருந்துவரும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தமக்கு எதிராக பெரிக்காத்தான் நேசனல் எவ்வளவு அவதூறு தெரிவித்து வந்தாலும் தாமே நாட்டின் 10 ஆவது பிரதமர் என அவர் கூறினார். தம்மை எதிர்ப்பவர்கள் இன்னும் நான்கு ஆண்டுகள் தேர்தலுக்காக காத்திருக்க வேண்டும் என பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவருமான அன்வார் கூறினார். பாகங்கில் பெலங்கை இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.