
எதிர்கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிகளுக்கு, ஒதுக்கீட்டை வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்ள வேண்டாம் என, பெரிகாத்தான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ சாயிடாம் காசிம் அரசாங்கத்துக்கு நினைவுறுத்தினார். பெர்லீஸ், கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெரிகாத்தான் நேஷனல் மக்கள் பிரதிநிதிகளுக்கு, மத்திய அரசாங்கத்தின் ஒதுக்கீடு வழங்கப்படாது என தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக, சாஹிடான் சொன்னார். “நாங்கள் மக்களால் தேர்வுச் செய்யப்பட்டவர்கள். எங்களை தேர்வுச் செய்ததால், மக்கள் தண்டிக்கப்படுவதை ஏற்க முடியாது. அரசாங்கம் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி அவசியம்.”
“அதோடு மக்கள் வரி செலுத்துகின்றனர். அதனால் எதிர்கட்சிக்கு வாக்களித்தால் அவர்கள் தண்டிக்கப்பட கூடாது என” அராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான சாஹிடான் சொன்னார். இதற்கு முன், டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமைத்க்துவத்தின் கீழ் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் ஒதுக்கீடு பகிர்ந்தளிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.