குளுவாங், பிப் 7- குளுவாங், Taman Tasek Indah பகுதியில் உள்ள சாலையில் எதிர்திசையில் Axia ரக வாகனம் ஒன்று பயணித்த காணொளி சமூக வலைத்தளத்தில் பரவலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகனமோட்டியைப் போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன்தினம் மதியம், Jalan Lingkaran Tengah -வில் நிகழ்ந்த அந்த சம்பவத்தை வலைத்தளவாசி ஒருவர் பதிவிட்டிருந்ததோடு, அந்த ஆடவர் குடிபோதையால் வாகனத்தை எதிர்திசையில் செலுத்துகிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும், சம்பந்தப்பட்ட ஆடவர், தவறான பாதையிலே வாகனத்தை செலுத்தியது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக குளுவாங் மாவட்டப் போலீஸ் துணை தலைவர் துணை சூப்பிரிண்டென்டன்ட் Abdul Razak Abdullah San கூறினார்.
மாலை 5.50 மணியளவில் கைது செய்யப்பட்ட அந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதோடு, அவர் ஓட்டி வந்த Axia காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.