கோலாலம்பூர், அக்டோபர் 8 – RHB Lekas Highway Ride 2024 மிதிவண்டி ஓட்டப்பந்தயத்திற்கு வழிவகுக்கும் காஜாங்-சிரம்பான் லெக்காஸ் (Lekas) நெடுஞ்சாலை, எதிர்வரும் சனிக்கிழமை 12ஆம் திகதி தொடங்கி 13ஆம் திகதி வரை மூடப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 5 மணி முதல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை அந்நெடுஞ்சாலை மூடப்படும்.
இப்பந்தயம் இரவு 7.45 மணிக்குத் தொடங்கும் என்றும், சம்பந்தப்பட்ட சாலைகள் சிரம்பானுக்குச் செல்லும் லெக்காஸ் நெடுஞ்சாலையின் இரண்டு கிலோமீட்டர், Bandar Teknologi நோக்கி லெக்காஸ் நெடுஞ்சாலை மற்றும் செமிஞ்சே (Semenyih) லெகாஸ் நெடுஞ்சாலை நுழைவாயிலும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், Ecohill, Jalan Bangi Lama, Jalan Eco Majestic ஆகிய லெக்காஸ் நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழிகளும் மூடப்படும் என்று காஜாங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ள காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.