புத்ரா ஜெயா, பிப் 22 – நான் பிரதமராக பதவி உறுதிமொழி எடுத்த சில நாட்களுக்குப் பின் அம்னோவின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஷாஹிட் தம்மை சந்திக்க வந்தது உண்மை.
இந்த விவகாரத்தில் தாம் அரசியல் விளையாட்டு விளையாடவில்லையென பெர்சத்து கட்சியின் தலைவரான டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தெரிவித்தார். ஸாஹிட் சத்தியம் செய்யப்போகிறாரோ இல்லையா, என்னைப் பொறுத்தவரை நான் சொல்வதுதான் உண்மையென முஹிடின் கூறினார்.
ஸாஹிட் தம்மை சந்திக்கவந்தபோது என்னுடன் இருந்த சாட்சி யார் என்பதையும் தெரிவித்துவிட்டேன். மக்களிடம் பேசும்போது பொய் சொல்லக்கூடாது என இன்று தேசிய மீட்சிக் குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசியபோது முஹிடின் தெரிவித்தார்.