
கோலாலம்பூர், நவ 27 – டிசம்பர் 19-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எந்தவொரு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் தனது எம்.பிக்கள் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பார்கள் என தேசிய முன்னணி தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கிறார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பினால் பிரதமர் தலைமையிலான நம்பகத்தன்மை குறித்த எந்தவொரு கேள்வியும் இனி எழாது என ஸாஹிட் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு ஆபத்தான ஒன்று என சிலர் தெரிவித்தாலும் ஜனநாய நடைமுறையில் ஒரு பகுதியாக நம்பிக்கை வாக்கெடுப்பு இருப்பதாக அவர் கூறினார்.
பேரரசரின் கட்டளைக்கு ஏற்ப தேசிய முன்னணயின் ஆதரவு இருக்கும் என ஸாஹிட் தமது முகநூலில் தெரிவித்தார். 15-ஆவது பொதுத் தேர்தல் முடிவில் எந்தக் கட்சியும் குறுகிய பெரும்பான்மையை பெறத் தவறியதைத் தொடர்ந்து பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேசனல் ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என பேரரசர் சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார். பக்காத்தான் ஹராப்பானுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்பதால் பெரிக்காத்தான் நேசனல் தலைவர் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.