
செப் 5 – வயதானால் பல் போய்விடும் எனும் அச்சம் பலருக்கு உண்டு. பல் போனால் சொல் மட்டுமல்ல அழகும் போய்விடுமே என்பதால் ஓட்டுப் பல் மற்றும் செயற்கை பல் நடவுக்காக அதிக செலவு செய்வோரும் உண்டு.
இவர்கள் போன்றோருக்கு மட்டுமல்ல எந்த வயதினருக்கும் இனி கவலை வேண்டாம் எனும் வகையில் பல்லை மீண்டும் வளர வைக்க முடியும் என ஜப்பானில் புதிய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
மரபணு ஆராய்ச்சியின் மூலம் மனிதர்களுக்கு மூன்றாவது வகை பல் இருப்பதாகவும் அதனை தேவைப்படும் போது வளர வைக்கலாம் எனவும் பல் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
USAG-1 மரபணுவில் உள்ள ஒரு வகை புரதம் பல் வளர்ச்சியை தடுப்பதால் அந்த புரதத்தின் அளவை குறைக்கும் போது பல் வளர்வதாக அவர்களின் கண்டுபிடிப்பு உறுதி செய்துள்ளது.
இந்த ஆய்வை எலிகளிடம் செய்து வெற்றிக் கண்ட அவர்கள் 2024-ல் மனிதர்களிடமும் ஆராய்ச்சி செய்யவுள்ளனர்.
2030-க்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அது வரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இது சாத்தியமானால் பல் மருத்துவ புத்தாக்கத்தில் பெரும் சாதனையாக அமையும்.