Latestமலேசியா

எனக்காக சாலையில் இறங்க வேண்டாம் ; பிரார்த்தனையே போதும் -முஹிடின்

கோலாலம்பூர், மார்ச் 10 – தம் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கண்டித்து சாலையில் இறங்கும்படி தாம் மக்களை அழைக்கப் போவதில்லை என டான்ஶ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

கோவிட்டுக்குப் பிந்திய பொருளாதார தாக்கத்தால் மக்கள் கஷ்டப்பட்டிருக்கும் நிலையில் , தாம் அவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்த விரும்பவில்லை.
சட்டத்திற்கு உட்பட்டு நாம் அமைதியைப் பேண வேண்டும்.
எனவே, மக்களின் பிரார்த்தனையே தமக்கு போதுமானது என , முஹிடின் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் தமக்கான நீதியைப் பெற தாமும், தமது வழக்கறிஞர் தரப்பும் ஈடுபடப் போவதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!