Latest

எனக்கு குற்றப்பின்னணியா? தேசிய முன்னணி வேட்பாளர் திட்டவட்ட மறுப்பு

குளுவாங், செப்டம்பர்-26, ஜோகூர், குளுவாங், மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர் Syed Hussien Syed Abdullah, தாம் குற்றப் பின்னணியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார்.

தம்மை அவ்வாறு குற்றம் சாட்டியுள்ள பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவைச் சேர்ந்த Badrul Hisham Shaharin மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக Syed Hussien எச்சரித்தார்.

“அதோடு Che’gu Bard என பரவலாக அழைக்கப்படும் அந்நபர், மற்றவர் முன்னிலையில் எனது அடையாள அட்டை எண்களையும் காண்பித்துள்ளது குற்றமாகும். அது பற்றியும் போலீசில் புகார் செய்வேன்” என்றார் அவர்.

மக்கோத்தாவில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய Che’gu Bard, அடிதடி சம்பவமொன்றுக்காக தேசிய முன்னணி வேட்பாளர் முன்பொருமுறை கைதுச் செய்யப்பட்டவர் என குற்றம் சாட்டினார்.

Syed Hussien குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எனக் கூறி போலீஸ் புகாரொன்றையும் அவர் காட்டியிருந்தார்.

அவரின் அத்தனைக் குற்றச்சாட்டுகளையும் மறுத்த Syed Hussien, மக்களிடம் ஆதரவு கேட்க தங்களிடம் ஒன்றும் இல்லாததால, பெரிக்காத்தான் தனிமனித தாக்குதலை நடத்துவதாக சாடினார்.

தேசிய முன்னணிக்கும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள மக்கோத்தா சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் சனிக்கிழமை நடக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!