Latestமலேசியா

எனக்கு தெரியாமலேயே எனது பிள்ளைகளை மதம் மாற்றுவதா? விரக்தியின் வேதனையில் தாயார் கண்ணீர்

பட்டவெர்த், பிப் 16 – எனது மகள்களை என்னால் சந்திக்க முடியவில்லை. ஆனால் பெர்லிஸ் mufti மட்டும் எப்படி சந்திக்க முடிந்தது .

இது மிகவும் கொடுரமான ஒன்று என தனித்து வாழும் தாயான Loh Siew Hong கேள்வி எழுப்பினார். அதோடு தமக்கு தெரிவிக்காமலேயே தமது மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்பட்டதோடு அவர்களது மதம் மாற்றம் குறித்து பெர்லிஸ் முப்தி Asri Zainul Abidin கேள்வி எழுப்பியிருப்பது குறித்தும் Loh Siew Hong தமது அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

தமது பிள்ளைகளுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லாதவர்கள் அவர்களை சந்திக்கும்போது , கோவிட் தொற்றின் கட்டுப்பாடுகளை காரணமாக காட்டி பெற்ற தாயான தாம் சந்திக்க முடியாதபடி கட்டுப்பாடுகளை விதிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கண்ணீர் மல்க வினவினார்.

அவர்கள் சிறார்கள்.

14 வயதான அவர்களிடம் உங்களது சமயம் என்ன என்று நீங்கள் எப்படி கேட்க முடியும். அவர்களது அம்மாவிடம்தான் சமயம் குறித்து கேட்க முடியும் என்றும் Loh Siew Hong சுட்டிக்காட்டினார்.

தமது இரட்டை பெண் பிள்ளைகளிடம் நேரத்தை செலவிடுவதுபோல் பெர்லீஸ் Mufti காணொளியை பதிவிட்டதைத் தொடர்ந்து Loh Siew Hong இதனை தெரிவித்தார்.

அந்த பிள்ளைகள் தொடர்ந்து முஸ்லிமாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தாம் பணியாற்றப் போவதாகவும் அந்த காணொளியில் Asri Zainul Abidin கூறுவதையும் பார்க்க முடிகிறது. எனினும் லோவின் 10 வயது மகன் அந்த காணொளியில் இடம் பெறவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!