
செபெராங் பிறை, ஜூலை ,17-எனது அமைச்சரவையில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் கை பரிசுத்தமானவர்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு அமைச்சர்களும் லஞ்ச ஊழலில் எவ்வித தொடர்பும் இல்லாதவர்கள் என அன்வார் கூறினார். கடந்த எட்டு மாதங்களாக தமது அமைச்சரவையை போலீசும் , MACC யும் அணுக்காமாக கண்காணித்து வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அமைச்சர்களில் எவரேனும் லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதை கண்டறியும்படி தாம் MACC க்கு பணித்திருந்ததாகவும் அவர்களில் ஒருவர்கூட லஞ்ச விவகாரத்தில் சம்பந்தப்படவில்லையென தெரியவந்ததாக Seberang Jaya வில் நேற்றிரவு பினாங்கு ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் இயந்திரத்தை தொடக்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார். நாட்டின் வரலாற்றில் இதுவொரு சாதனை என்றும் அவர் வருணித்தார். நாம் கை சுத்தமாக இருக்க வேண்டிய அவசியம் இருப்பதோடு நாட்டையும் பாதுகாக்க வேண்டும். எதிர்வரும் மாநில தேர்தலில் அம்னோ மற்றும் பக்காத்தான் கூட்டணி வெற்றி பெறுவதற்கு சிறந்த வியூகத்துடம் செயல்பட வேண்டுமென அன்வார் கேட்டுக்கொண்டார்.