Latestமலேசியா

எனது நிலையை பிரதமர்தான் முடிவு செய்வார்- சுரைடா

கோலாலம்பூர், ஜூன் 7 – பெர்சத்து கட்சியிடமிருந்து நெருக்குதல் வந்துள்ளபோதிலும் தோட்ட தொழில் மற்றும் மூலப் பொருள் அமைச்சர் என்ற தமது நிலையை முடிவு செய்வதை பிரதமர் டத்தோஸ்ரீ Ismail Sabri Yaakob அவர்களிடமே விட்டுவிட்டதாக அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரான Zuraidah Kamaruddin தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பிரத்தியோக முடிவு எடுக்கும் அதிகாரம் பிரதமரைப் பொறுத்ததாகும் என அவர் சுட்டிக்காட்டினார். பி.பி.எம் கட்சியில் இணையவிருப்பதால் பெர்சத்து கட்சியிலிருந்து விலகுவதாக மே 26ஆம் தேதி சுரைடா அறிவித்தார். பெர்சத்துவின் உறுப்பினர் நிலையிலிருந்து சுரைடா நீக்கப்பட்டு விட்டதால் அவர் வகித்துவந்த அமைச்சர் பதவி கட்சியின் மற்றொரு உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும் என பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கோரிக்கை விடுத்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!