
கோலாலம்பூர், செப் 23 – எதிர்க்கட்சித் தலைவர் Hamzah Zainudin , தமது நீண்ட நாள் நண்பர் என பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார். தாம் பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நாட்களிலிருந்து அவரை தமக்கு தெரியும் என ராமசாமி கூறினார். எனினும் அண்மையில் பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளருமான அவரை சந்தித்தது குறித்து அரசியல் ரீதியில் கருத்துரைப்பதற்கு ஒன்றுமில்லையென அவர் தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத் தேர்தலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஆகஸ்ட் மாதம் DAP யிலிருந்து ராமசாமி விலகினார் . ராமசாமி 2008 முதல் 2013 வரை பத்து கவான் எம்.பி.யாக இருந்தார். அவர் என் நண்பர், நாங்கள் எங்கள் நட்பைப் பேணி வருகிறோம். தேசிய அரசியலில் ஈடுபடுவதற்காகவே நேற்று கோலாலம்பூரில் லாருட் எம்.பியுமான Hamazah Zainudin னை சந்தித்தேன். வேறு எதுவும் இல்லை ராமசாமி கூறினார். பிறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ராமசாமி, டேவிட் மார்ஷல் மற்றும் எம் சதீஸ் ஆகியோருடன் தாம் இருக்கும் புகைப் படத்தை Hamazah Zainuddin தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.