
கோலாலம்பூர், மார்ச் 23 – முன்பணம் செலுத்தாமல் முதல் வீட்டை வாங்க உதவுவதற்காக, 2011 – இல் அறிமுகப்படுத்தப்பட்ட Skim Rumah Pertamaku திட்டம், ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி நிறுத்தப்படும்.
அந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை ஏற்றிருக்கும் Cagamas Bhd நிறுவனம் அதனைத் தெரிவித்தது.
அதையடுத்து, Skim Rumah Pertamaku திட்டத்தின் கீழ் வீட்டு கடனுக்கான விண்ணப்பம் செய்யவிருப்பவர்கள், மார்ச் 31 –ஆம் தேதிக்குள் அதனை செய்து விடும்படி அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது.