கோலாலம்பூர், பிப் 18 – எனது நீதிமன்ற வழக்குகளில் தலையிடும்படி டான்ஸ்ரீ முஹிடினை கேட்டுக்கொள்ளவில்லையென டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தெரிவித்தார். முன்னாள் பிரதமரான டான்ஸ்ரீ முஹிடின் யாசினை தாம் ஒரு முறை மட்டுமே சந்தித்தாக அவர் கூறினார்.
இ.பி.எப்பிலிருந்து பண மீட்பை அனுமதிக்குப்படி வலியுறுத்துவதற்காக 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரை சந்தித்தேன் . அப்போது எனது நீதிமன்ற வழக்குகள் குறித்து முஹிடின் என்னிடம் விசாரித்தார். எனது வழக்குகளில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குழுவிற்கு கோபால் ஸ்ரீ ராம் தலைமையேற்பதிலிருந்து நீக்க வேண்டும் என்பது குறித்து தாம் விண்ணப்பம் செய்துள்ளதாக அவருக்கு மறுமொழி தெரிவித்தேன் .
அதைவிடுத்து எனக்கு எதிரான வழக்குகளை மீட்டுக்கொள்வதற்கோ அல்லது நீதிபதியை மாற்றும்படி முஹிடின் யாசினிடம் தாம் கோரிக்கை எதனையும் விடுக்கவில்லையென முன்னாள் பிரதமருமான நஜீப் கூறினார்.