ஈப்போ, ஜனவரி-10, “என்னை தயது செய்து தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனைக்கே அனுப்பி விடுங்கள்”
மனநலக் காப்பகமொன்றைச் சேர்ந்தவரை கொலைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆடவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் கூறிய வார்த்தை அது.
கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 7.45 மணி வாக்கில் 26 வயது Muhammad Afiq Wafiuddin Lokeman என்ற நபரை கொலைச் செய்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேட்ட போது, 32 வயது Muhammad Firdaus Zohare அவ்வாறு முறையிட்டார்.
“நான் ஏற்கனவே 2 முறை அங்கு இருந்துள்ளேன்; என்னை மீண்டும் அங்கேயே அனுப்பி விடுங்கள்” என அவர் சொன்னார்.
எனினும், ஒரு மாத கால கண்காணிப்பில் இருக்குமாறு அவரை உத்தரவிட்ட நீதிபதி, பிப்ரவரி 18-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென்றார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.