Latestமலேசியா

என்னை மன்னித்து திரும்ப ஏற்றுக் கொள்ளுங்கள்; மன்றாடும் தியான் சுவா

கோலாலம்பூர், ஜன 14 – கட்சி விதிகளை மீறியதற்காக , கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தம்மை, டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மன்னித்து , மீண்டும் ஏற்றுக் கொள்வார் என PKR கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் Tian Chua நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

கடந்த 15 -வது பொதுத் தேர்தலில் PKR வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டதால், தியான் சுவா கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அந்த கடும் நடவடிக்கை தொடர்பில் மேல் முறையீடு செய்ய , அவருக்கு 14 நாட்கள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் , தம்மை தற்காத்து மேல் முறையீடு செய்வதற்கு தக்க காரணம் எதுவும் தம்மிடம் இல்லையென, அன்வாரைப் பலமாக ஆதரிக்கும் தியான் சுவா குறிப்பிட்டிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!