Latestமலேசியா

என்ரிகோஸ் மற்றும் பஞ்சா நிறுவனங்களின் ஏற்பாட்டில் ‘இளைய வர்த்தகர் 2.0’ கருத்தரங்கு; – ஆகஸ்ட் 17 & 18

கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – வியாபாரத்துறை பரந்து விரிந்து கிடைக்கிறது. அந்த வியாபாரத்துறையை மாணவர்களும் கற்றறிந்து பீடு நடை போட வேண்டும் எனும் நோக்கில் என்ரிகோஸ் ரவிராஜ் நிறுவனம், பஞ்சா நிறுவனம் மற்றும் இளையோர் வர்த்தகர் சங்கமும் இணைந்து ‘இளைய வர்த்தகர் 2.0’ எனும் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளன.

இக்கருத்தரங்கை வியாபாரத்துறையில் 40 ஆண்டுகள் அனுபவமுள்ள என்ரிகோஸ் ரவிராஜ் நிறுவனத்தின் தோற்றுனரும் இயக்குநருமான SK Sundaram அவர்கள் வழிநடத்தவிருக்கின்றார்.

வியாபாரத்துறையில் முன்னேறிச் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை கொண்ட ஆரம்பப் பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விகூட மாணவர்கள் பங்கேற்கும் ஓர் அரிய கருத்தரங்கமாகும்.

ஒரு தொழிலை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எப்படிச் செயல்படுத்துவது; அதில் எவ்வாறு வருவாயினை பெறுவது என முற்றிலும் இலவசமாக இந்த கருத்தரங்கின் வழி கற்றுக்கொடுக்கப்படும்.

அதுமட்டுமா? வியாபாரத்தில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு, மூலதனமும் வழங்கப்படவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு 500 ரிங்கிட் மூலதனமும், இடைநிலை மாணவர்களுக்கு 200 ரிங்கிட்டும், ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு 100 ரிங்கிட் மூலதனமும் கொடுக்கப்படும்.

மாணவர்கள் வியாபாரத்தை ஆரம்பித்து, இலாபமீட்டி, மூலதனத்தைத் திருப்பி கொடுக்கும் வரையில் வழிகாட்டப்படும்.

இன்னும் என்ன யோசனை? வருகின்ற ஆகஸ்ட் 17ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்களுக்கும், 18ஆம் திகதி ஆரம்பப் பள்ளிக்கும் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் இக்கருத்தரங்கு பத்து கேவ்ஸ்-ஸில் அமைந்துள்ள Divine Life Society மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள இன்றே, மறவாமல் திரையில் காணும் கூகள் படிவதில் பதிவு செய்யுங்கள்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!