Latest

என்.எஸ்.டியின் முன்னாள் பத்திரிகையாளர் மார்க் லூர்தர்ஸ் விபத்தில் மரணம்

கோலாலம்பூர், ஜன 5 – கிளந்தானில் ஜாலான் கோத்தா பாரு – கோலா கிராய் சாலையின் 40 ஆவது கிலோமீட்டரில் இன்று நிகழ்ந்த விபத்தில் என்.எஸ்.டி பத்திரிகையின் முன்னாள் பத்திரிகையாளர் Marc Lourdes ( மார்க் லூர்தர்ஸ் ) உயிரிழந்தார். உயர் இயந்திர ஆற்றலைக் கொண்ட மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவர் எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதியபோது மார்க் லூதர்ஸ் இறந்தார் என அவரது மைத்துனரான Raymond Jude உறுதிப்படுத்தினார். இன்று பிற்பகல் மணி 1.20 அளவில்
கோலா கிராயிலிருந்து கோத்தாபாரு சென்று கொண்டிருந்தபோது 40 வயதுடைய மார்க் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே இறந்தார் என மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை சூப்பிரடண்ட் Ganti Jimmy கூறினார். அந்த விபத்தில் 26 வயதுடைய கார் ஓட்டுனர் காயம் எதுவுமின்றி உயிர் தப்பினார்,

மார்க்கிற்கு மனைவி தர்ஷினி கந்தசாமி மற்றும் தாயார் இருந்துவருகின்றனர். என்.எஸ்.டியில் இணைவதற்கு முன் 2005ஆம் ஆண்டு தமது பத்திரிகை வாழ்க்கையை 2005ஆம் ஆண்டு தெ ஸ்டார் பத்திரிகையில் மார்க் தொடங்கினார். அதன் பின் Yahoo Malaysia வின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

Yahoo Singapore மற்றும் Yahoo Southeast Asia ஊடகத்தின் ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார். CNN னில் இணைவதற்கு முன் ஆசியாவுக்கான Digital இயக்குனராகவும் இருந்தார். Tatler Asia group குழுமத்தின் வட்டார இலக்கவியல் உள்ளடக்கத்திற்கான இயக்குனர் பொறுப்பை ஏற்பதற்கு முன் Astro வின் உதவித் தலைவராகவும் இந்திய நிகழச்சிகளுக்கான தலைவராகவும் அவர் இருந்து வந்தார், கடந்த 17 ஆண்டு காலம் அவர் உலகிலுள்ள பல்வேறு ஊடக நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார். தொடக்கத்தில் முழுமையாக செய்தித் துறையில் கவனம் செலுத்திவந்த மார்க் பிறகு ஊடகத்தின் தலைமைத்துவத்திற்கு முழு நேரம் தம்மை அர்ப்பணித்துக்கொண்டார். இதனிடையே மார்க்கின் மரணம் தமக்கு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாக அவரது மனைவி தர்ஷினி வேதனையுடன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!