
சைபர் ஜெயா, மார்ச் 7 – தமது நண்பர்களாக இருந்தாலும் வரி செலுத்தத் தவறும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி LHDN எனப்படும் உள்நாட்டு வருமான வரித்துறையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். எனது நண்பர்கள் அல்லது எனது ஆதரவாளர்களாக இருந்தாலும் வருமான வரியை கட்டாயமாக செலுத்த வேண்டும். அவர்களிடமிருந்து வரியை வசூலிப்பதற்கு உள்நாட்டு வருமான வரி வாரியம் முழுவீச்சிலான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழச்சியில் கலந்துகொண்டபோது பிரதமர் இதனை தெரிவித்தார்.