ஜியோர்ஜ்டவுன், ஆகஸ்ட் -28 – பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் (PHEB) முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை, மாநில முன்னாள் துணை முதல் அமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி மறுத்துள்ளார்.
தாம் பதவியிலிருந்த போது அனைத்து முக்கிய முடிவுகளும் கூட்டு இணக்கத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டன.
இந்நிலையில் திடீரென முறைகேடு எங்கிருந்து முளைத்தது என, உரிமை கட்சியின் இடைக்காலத் தலைவருமான ராமசாமி கேட்டார்.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது உள் தணிக்கையில் கண்டறியப்பட்டதாக, அதன் நடப்புத் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர் அம்பலப்படுத்தியிருந்தது குறித்து ராமசாமி கருத்துரைத்தார்.
அறப்பணி வாரியத் தலைவராக நான் பதவி வகித்த 13 ஆண்டுகளில், ராயரும், மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் செயற்குழுத் தலைவர் S.சுந்தராஜூ இருவரும், வரியத்தின் ஆணையர்களாக இருந்துள்ளனர்.
முக்கிய முடிவுகளை கூட்டு இணக்கத்தின் அடிப்படைலேயே எடுத்தோம்; இப்போது மொத்த பழியும் என் மீது போடப்படுவது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சியே என ராமசாமி சாடினார்.
உள் தணிக்கை அறிக்கையை
ராயர், மலேசிய ஊழல் தடுப்பாணையத்திடம் (MACC) சமர்ப்பித்திருப்பதாக ராயர் கூறுகிறார்.
MACC தாராளமாக விசாரிக்கட்டும், விரிவான விசாரணையை நான் பெரிதும் வரவேற்கிறேன் என ராமசாமி அறிக்கையில் கூறினார்.