Latestமலேசியா

என் பிள்ளைகள் எனக்கு வேண்டும் – Loh Siew Hong கண்ணீர்

ஜோர்ஜ் டவுன், பிப் 18 – என் மூன்று பிள்ளைகளும் என் பராமரில் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியில்தான் இப்போது ஈடுபட்டு வருகிறேன் என தனித்து வாழும் தாயான Loh Siew Hong தெரிவித்தார்.

எனது பிள்ளைகள் என்னிடமே திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். இது சமய விவகாரம் அல்லது அரசியல் சார்ச்சை அல்ல என அவர் கூறினார்.

தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு தினசரி அனுமதி வழங்குவதாக இதற்கு முன் பெர்லீஸ் சமூக நலத்துறை உறுதியளித்திருந்தது. எனினும் அவர்களை பார்ப்பதற்கு நேற்று மீண்டும் பெர்லீஸ் சமூக நலத்துறை தடுத்ததாக Loh Siew Hong தெரிவித்தார்.

எனது 14 வயதுடைய இரட்டை பெண் பிள்ளைகள் மற்றும் 10 வயதுடைய பையனை பார்ப்பதற்காக பல்வேறு பரிசுப் பொருட்களையும் வாங்கி சென்றேன். ஆனால் அவர்களை பார்ப்பதற்கு தமக்கு அனுமதி வழங்கப்படாதது என்ன நியாயம் என Loh Siew Hong கண்ணீர் மல்க இணையத்தள பதிவேட்டிடம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!