Latestமலேசியா

“என் மகளை ஏன் அப்படி செய்தாய்?” ; ஈப்போவில், துன்புறுத்தலுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமியின் தாய் கதறல்

ஈப்போ, ஜூன் 21 – “என் மகளை ஏன் அப்படி செய்தாய்?” என கேட்டு 28 வயது தாய் ஒருவர் கதறிய காட்சி, பேராக், ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இருந்தவர்களின் மனதை இன்று நெகிழ வைத்தது.

மகளின் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு பின், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பெண் ஒருவரை பார்த்து, சித்தி நூர்ஹிதாயத்துல் அக்மார் முஹமட் ஜம்ரி (Siti Nurhidayatul Akmar Mohd Zamry) எனும் அப்பெண் கதறினார்.

முன்னதாக, அவ்வழக்கில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள 28 வயது வான் பாத்தினா ஜாரா வான் அப்துல்லாவுக்கு (Wan Fatimah Zahra Wan Abdullah) எதிராக, மாஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், அவரிடமிருந்து இன்று வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.

இம்மாதம் ஐந்தாம் தேதிக்கும் பத்தாம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், சிலிபின் (Silibin), தாமான் மால்காப்பிலுள்ள (Taman Malcop) வீடொன்றில், 5 வயது இமான் அடெலியா யூசுல்லாவிற்கு (Iman Adelia Yusullah), மரணம் விளைவித்ததாக, ஜாரா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

ஜாராவை உத்தரவாதத்தில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கவில்லை. இவ்வழக்கு விசாரணை ஆகஸ்ட்டு மாதம் 28-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, வளர்ப்பு மகளை துன்புறுத்தி மரணம் விளைவித்த குற்றம் தொடர்பில், போலீசார் இம்மாதம் பத்தாம் தேதி, பேராக், சிலிபினில் தம்பதியை, கைதுச் செய்ததாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!