Latestமலேசியா

எபிட் லியூ மீது பாலியல் தொல்லை தொடர்பில் 11 குற்றச்சாட்டுகள்

தெனோம், பிப் 18 – பிரபல மத போதகரான எபிட் லியூ ( Ebit Lew )மீது பாலியல் தொல்லை தொடர்பில், தெனோம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
38 வயதான எபிட் லியூ அந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கின்றார்.

பெண் ஒருவரின் மரரியாதையைக் குறைக்கும் வகையில், சபா தெனோம் மாவட்டத்தில் கடந்தாண்டு மார்ச்சிலிருந்து ஜூன் வரையிலான கால கட்டத்தில், வட்சாப்பின் மூலமாக, படங்களையும் ஆபாச வார்த்தைகளையும் குறிப்பிட்டு அனுப்பியதாக எபிட் லியூ குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எபிட் லியூ , ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 1,000 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் , இரு நபர் உத்தரவாதத்திலும் விடுவிக்க அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!