
தெ ஹெக், பிப் 8 – 2014ஆம் ஆண்டு மலேசிய விமான நிறுவனத்தின் MH 17 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் மேலும் சில சந்தேகப் பேர்வழிகளின் பெயர்களை விசாரணையாளர்கள் இன்று அறிவிக்கவிருக்கின்றனர். அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் ரஷிய உளவு நிறுவனத்தின் இரண்டு முன்னாள் ஏஜெண்டுகள் மற்றும் உக்ரைய்ன் பிரிவினைவாத தலைவர் ஆகியோர் சம்பந்தப்பட்டதில் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெதர்லாந்து நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்தது. எனினும் அந்த மூவரும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் அவர்கள் விசாரணையில் பங்கேற்காத போதிலும் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இப்போது விசாரணை அதிகாரிகளுக்கு மேலும் சில புதிய ஆதாரங்கள் ள் கிடைத்துள்ளதால் எம்.எச் 17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதில் சம்பந்தப்பட்ட மேலும் சில சந்தேகப் பேர்வழிகளின் பெயர்களை விசாரணை அதிகாரிகள் வெளியிடவுள்ளனர்.