
மொன்ட்டிரியல் மார்ச் 18 – 2014ஆம் ஆண்டு மலேசியாவின் எம் .எச் 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிராக வழக்கு தொடுப்பதற்கு ஐ.நா விமான போக்குவரத்து மன்றம் வாக்களித்திருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் Penny Wong தெரிவித்துள்ளார். அனைத்துவலக சட்டத்தின் கீழ் MH 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என்பதால் இந்த விவகாரத்தை அனைத்துலக சிவில் போக்குவரத்து கழகத்திற்கு கொண்டுச் சென்றதன் மூலம் அந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அனைத்து 298 பேருக்கும் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். கிழக்கு உக்ரைய்னுக்கு உயரே பறந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து விண்ணில் பாய்ச்சப்பட்ட ஏவுகனை சுட்டு வீழ்த்தியிருப்பதாக அனைத்துலக விசாரணையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளனர்.