
கோலாலம்பூர், மே 10 – எம்.ஏ.சி.சியின் தலைவர் Azam Baki யின் ஒப்பந்தகால சேவை மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது சேவைக் கால உடன்பாடு மே 12ஆம்தேதியோடு முடிவடைவதாக இருந்தது. இதற்கு முந்தைய பக்காத்தான ஹரப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அப்போது எம்.ஏ.சி.சி தலைவராக இருந்த லப்திபா கோயா பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி எம்.ஏ.சி.சி தலைவராக Azam Baki நியமிக்கப்பட்டார்.