கோலாலம்பூர், ஏப் 30 – பெர்லீஸ் மந்திரிபெசார் Mohd Shukri Ramli MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபின் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார். Shukri தடுத்து வைக்கப்படவில்லை என அவரது அதிகாரப்பூர்வை முகநூலில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. Shukri கைது செய்யப்படவில்லையென அந்த முகநூலை கையாளும் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமது மகன் போலி பணக் கோரிக்கை விவகாரத்தில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று காலையில் வாக்குமூலம் அளிப்பதற்காக சுக்ரியை MACC அழைத்திருந்தது. 63 வயதுடைய பெர்லீஸ் மாநில பாஸ் ஆணையாளருமான Shukri இன்று காலையில் புத்ரா ஜெயாவிலுள்ள MACC அலுவலகத்திற்கு சென்றிருந்தார். பெர்லீஸ் ராஜா Tuanku Syed Sirajuddin Putra Jamalullail க்கு குடிநீர் விநியோகம் செய்தது தொடர்பில் 600,000 ரிங்கிட் போலி பண கோரிக்கையில் தனது மகனுக்கு மகனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து Shukriயை MACC அழைத்திருந்தது.
பிப்ரவரி 19ஆம் தேதியிட்ட பணம் செலுத்தும் ரசிது நகல் வைரலாதை தொடர்ந்து Tuanku Syed Sirajuddinனுக்கு 19,505 ரிங்கிட் மதிப்புள்ள குடிநீர் விநியோகத்திற்கான பணக் கோரிக்கை அதுவென தெரிவிக்கப்பட்டது. Tuanku Fauziah மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், குடிநீர் விநியோகம் எதுவும் வழங்கப்பப்படவில்லை என இப்போது தெரியவந்துள்ளது. ஆவணத்தின் நம்பகத்தன்மையை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.