எம்.ஏ.சி.சி அகடெமிக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இயற்கை அம்சங்கள் காரணம் அல்ல.

கோலாலம்பூர், ஏப் 26 – கோலாலம்பூரில் Persiaran Tuanku Syded Sirajuddin னில் MACC
அகடெமிக்கு முன்புறம் நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இயற்கை அம்சங்கள் காரணம் கிடையாது என பொதுப் பணி அமைச்சர் Alexander Nanta Linggi தெரிவித்திருக்கிறார்.
நிலத்திற்கு அடியில் இருந்த நீர் குழாய் உடைந்து அதில் கசிந்த நீர் தேங்கியதால் அந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக பொதுப் பணித்துறையின் மலைச்சாரல் பகுதி பொறியியல் பிரிவு மேற்கொண்ட தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவருவதாக அவர் கூறினார். எனினும் அந்த சம்பவம் தொடர்பில் பொதுப்பணித்துறை தற்போது முழுமையான மற்றும் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாக Alexander Nanta தெரிவித்தார்.
இதனிடையே அந்த நிலச்சரிவைத் தொடர்ந்து IIM எனப்படும் மலேசிய நேர்மை கழகத்தின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே தங்களது வேலையை தொடரும்படி கேட்டுக்கொண்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அந்த கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.