
கோலாலம்பூர், மார்ச் 9- அரசியல்வாதிகளை குற்றஞ்சாட்டப்பபடுகின்றனர் என்று குறைகூறுவதற்கு முன் விவரங்களை அறிந்துகொண்டு பேசும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். நிதியமைச்சிடம் பெறப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் Jana Wibawa விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர அது தொடர்பான விசாரணையில் தமக்கு தொடர்பு இல்லையென்றும் அன்வார் விவரித்தார். பெர்சத்து தலைவர்கள் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டுப்பட்டுவது அரசியல் நடவடிககையின் ஒரு பகுதி என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். இதற்கு முன் பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான அரசாங்கம் கோவிட் 19 பொருளாதார திட்டங்களில் 92.5 பில்லியன் ரிங்கிட் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ .சி விசாரணை மேற்கொண்டு வருவதோடு அதன் அடிப்படையில்தான் சில அரசியல்வாதிகள் மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது என அன்வார் கூறினார்.