
சென்னை, மார்ச் 24 – தனது செய்கையினால் எரிச்சலடைந்திருப்பதாகக் கூறியிருக்கும் மலேசிய ரசிகைக்கு பதிலடி கொடுத்திருக்கின்றார் , குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவரான வெங்கடேஷ் பட்.
இந்தியாவின் , விஜய் டிவி அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பிரபல சமையல் நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக வெங்கடேஷ் பட் உள்ளார்.
அவர் , அண்மையில் தாம் புதிய யூடியுப் அகப்பக்கத்தை திறக்கப்போவதாக தனது பேஸ்புக்கில் அறிவித்திருந்தார்.
அந்த பதிவை அடுத்து, பலர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட நிலையில், மலேசிய ரசிகை ஒருவர், சமையல் நிகழ்ச்சியில் வெங்டேஷ் பத், கோமாளிகளை நடத்தும் விதம் தமக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறியிருந்தார்.
மற்றவர்கள் மீது பொருட்களை தூக்கி அடிப்பதை நிறுத்தி விட்டு மரியாதையுடன் நடந்துக் கொள்ளும்படியும் , பிறருக்கு முன்னூதாரணமாகவும் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பதில் அளித்த வெங்கடேஷ் பட் இது வெறும் டிவி நிகழ்ச்சி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தயவு செய்து பார்க்காதீர்கள். கவுண்டமணி, செந்தில் அடிக்கவில்லையா ? சார்லி சாப்ளின் அடி வாங்கவில்லையா ? ஜெர்ரி டாமை எரிச்சலூட்ட வில்லையா ? கொஞ்சமாவது வளருங்கள், இது வெறும் ஒரு நிகழ்ச்சி. நான் சொன்னேன் என்பதற்காக விஷத்தை குடித்து விடுவீர்களா என்று பதிலடி கொடுத்துள்ளார்.