
கோலாலம்பூர், ஜன 2 – இன்று அதிகாலையில், கோம்பாக், Kampung Tanguit , Jalan Dewan Simpang Tiga பகுதியில், வீடொன்று தீப்பற்றி எரிந்ததில், இரு சகோதரர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தில், 7, 10 வயதுடைய இரு சிறுவர்கள் தீயில் கருகி மாண்டதாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு துறையின் இயக்குநர் Datuk Norazam Khamis தெரிவித்தார். சம்பவத்தின் போது, அச்சிறுவர்களின் பெற்றோர் வீட்டில் இல்லையெனவும், உடல்கள் கண்டெடுக்கப்பட்ட விதத்தின் அடிப்படையில், பூட்டியிருந்த இரும்புக் கதவின் மூலமாக அந்த இரு சிறுவர்களும் தப்பிக்க முயன்றதாக நம்பப்படுவதாக அவர் கூறினார்.