Latestமலேசியா

“SemakMule” தரவுத்தளம்; மோசடியுடன் தொடர்புடைய 160,000 வங்கிக் கணக்குகள், தொலைப்பேசி எண்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

கோலாலம்பூர், ஜனவரி 5 – புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறையின், “SemakMule” தரவுத்தளத்தில், மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 95 வங்கிக் கணக்குகளும், தொலைபேசி எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகள் மற்றும் தொலைப்பேசி எண்களை, சரிபார்க்க அல்லது அவற்றின் நம்பகத்தன்மையை பொதுமக்கள் உறுதிச் செய்துக் கொள்ள உதவும் வகையில், 2018-ஆம் ஆண்டு “SemakMule” தரவுத் தளம் உருவாக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த சுமார் ஐந்தாண்டு காலகட்டத்தில், அந்த தரவுத் தளம் மொத்தம் இரண்டு கோடியே பத்து லட்சம் தேடல்களுடன், இரண்டு கோடியே 40 லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளதாக, புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் இயக்குனர், டத்தோ ஸ்ரீ ரம்லி முகமட் யூசுப் தெரிவித்தார்.

அந்த எண்ணிக்கையில், 15 லட்சம் பயனர்கள், தங்கள் தேடல் நேர்மறையான பதில்களை தந்ததாக நம்பிய வேளை; அதன் வாயிலாக, பயனர்கள் தங்கள் பணத்தை மோசடி கும்பல்களிடமிருந்து பாதுகாத்து கொள்ள முடிந்ததாகவும், ரம்லி சொன்னார்.

அதனால், மோசடி நடவடிக்கை அல்லது மோசடி கும்பல்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தை பறிகொடுப்பதை தவிர்க்க, “SemakMule” தளவுத் தள வசதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுவதாகவும் Ramli குறிப்பிட்டார்.

2023-ஆம் ஆண்டு, மலேசிய நிர்வாக திட்டமிடல் மற்றும் நிர்வாக நவீனமய பிரிவான MAMPU-வின் பொதுச் சேவை துறைக்கான முதன்மை புத்தாக்க விருது விழாவில், “SemakMule” தரவுத் தளம் இரண்டாது இடத்தை பிடித்ததையும் ரம்லி சுட்டிக்காட்டினார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!