Latestமலேசியா

எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 கார்களை “Chery” நிறுவனம் தயார்படுத்தும்

சுபாங் ஜெயா, ஏப் 2 – புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 50 கார்களை “Chery” நிறுவனம் ஏற்பாடு செய்யும் என சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஷி ஹான் ( Ng Sze Han) தெரிவித்தார்.

தீயின் கடுமையான வெப்ப அளவினால் பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததால் அவர்கள் அனுபவித்த சிரமங்களைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் கார்களை வழங்க செரி மலேசியா இன்று காலை ஒப்புக் கொண்டது.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் இது வழங்கப்படும் என்றும், தனது அலுவலகம் அல்லது கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் (Sampunathan ) அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்பங்களை செய்யலாம் என “Ng Sze Han” தெரிவித்தார்.

உண்மையில் தேவைப்படுபவர்களுக்கே வழங்கப்படும் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக அந்த வாகனங்கள் ஒப்படைக்கப்படும் என்பதோடு இந்த கார்களின் மொத்த மதிப்பு 500,000 ரிங்கிட்டாகும் என அவர் கூறினார்.

நேற்று ஏற்பட்ட இந்த தீவிபத்தில் புத்ரா ஹைட்ஸில் “Jalan Putra Harmoni” யில் 500 மீட்டர் நீளத்திற்கான எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து அந்த வட்டாரத்திலுள்ள 300 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 70 வீடுகள் முழுமையாக சேதம் இடந்தன.

இதுதவிர புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் 10 கடைகளும் பாதிக்கப்பட்டன. இதுதவிர அந்த தீவிபத்தினால் 148 கார்கள் மற்றும் 11 மோட்டார்சைக்கிள்களும் பாதிக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!