
சூடானில், கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக, திருடிய மூன்று ஆடவர்களின் கைகளை வெட்டும் உத்தரவை பிறப்பித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
20 வயது மதிக்கத்தக்க அம்மூன்று ஆடவர்களும், எரிவாயு கொள்கலனை திருடியது நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்ததாக கூறப்படுகிறது.
தண்டனையை நிறைவேற்றுவதற்காக தேதி இன்னும் நிர்ணயிக்கப்படாததால், தற்சமயம் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.