கிள்ளான், பிப் 9 – நேற்று கிள்ளான், ஜாலான் மேருவில் எ.டி.எம் பணப் பட்டுவாடா இயந்திரத்தை வெடிக்கச் செய்து அதிலிருந்த பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த கொள்ளையர்கள் என தெரியவந்துள்ளது. அந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட இருவர் ஒரு வகையான எரிவாயுவை பணப் பட்டுவாடா இயந்திரத்தில் இணைத்து அந்த இயந்திரத்தை வெடிக்கச் செய்துள்ளது அங்குள்ள சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமராவின் மூலம் தெரிய வந்தது. அதனையடுத்து, அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த 260,000 ரிங்கிட் பனம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வட கிள்ளான் மாவட்ட போலீஸ தலைவர் துணை கமிஷனர் S. Vijaya Rao கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட இருவரும் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் நம்பப்படுகின்றது.
Related Articles
Check Also
Close
-
இயக்குனரும் நடிகருமான கஜேந்திரன் காலமானார்10 hours ago