
சிப்பாங், ஜன 7 – இன்று அதிகாலை 1.30 மணியளவில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பதின்ம வயது இளைஞன் ஜாலான் டெங்கில் ஆயர் ஈத்தாம் சாலையில் எருமை மீது மோதியதில் இறந்தான். தலையில் கடுமையாக காயம் அடைந்த அந்த இளைஞன் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே மரணம் அடைந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Kamarul தெரிவித்தார். டிங்கிலிருந்து தாமான் டிங்கில் ஜெயாவிலுள்ள தனது வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் அந்த இளைஞன் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக Wan Kamarul கூறினார்.