
வாஷிங்டன், மார்ச் 31 – அமெரிக்காவின் முன்னாள் அதிபர் Barack Obama, கனடாவின் பிரபல பாடகர் Justin Bieber ஆகியோரைவிட சமூக வலைத்தளத்தில் எலன் மஸ்க்கின் டிவிட்டரை அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். 44 பில்லியன் டாலருக்கு அந்த மின்பதிவு சமூக வலைத்தளத்தை Elon Musk கொல்முதல் செய்த 5 மாதங்களில் அவரது டிவிட்டரை 133 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். 2020ஆம் ஆண்டிலிருந்து Barack Obama வின் டுவிட்டரை அதிகமானோர் கண்காணித்து வருகின்றர் என கிண்ணஸ் உலக சாதனை அறிக்கை தெரிவித்துள்ளது. மாதந்தோறும் சுமார் 450 மில்லியன் பேர் டுவிட்டரை பின்பற்றி வருகின்றனர். அவர்களில் 30 விழுக்காட்டினர் Elon Musk டுவிட்டர் வலைத்தளத்தை கவனித்து வருகின்றனர்.