ஷா ஆலம், ஆகஸ்ட் 26 – பிரபலமான பொழுதுபோக்கு மையமான தாமான் எகோ ரிம்பா சுங்கை தெகலா (Taman Eko Rimba Sungai Tekala), இன்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனை, சிலாங்கூர் வனத்துறை தனது முகநூல் பதிவின் மூலம் அந்த உத்தரவை அதன் இயக்குநர் அசார் அகமட் (Azhar Ahmad) பிறப்பித்ததாகப் பதிவேற்றம் செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதியில் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis) அல்லது எலி சிறுநீரினால் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, இன்று தொடங்கி எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனைத்து பார்வையாளர்களுக்கும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.