
ஷா ஆலாம், ஆக 18 – எல்மினா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் புகைப்படத்தையோ காணொளிகளையோ பகிர்வது சட்டபடி குற்றமாகும் என மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் எச்சரித்திருக்கிறது.
குற்றம் நிருபிக்கப்பட்டஆல் 50,000 ரிங்கிட் அபராதமும் அல்லது ஒரு வருடத்திற்கு மேல் போகாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என அது கூறியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை காட்டுமாறு அது பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.