
ஷா ஆலாம், ஆகஸ்ட்டு 21 – எல்மினாவில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தில், NTSB – அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய அதிகாரிகள், FAA – பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் Beechcraft விமான தயாரிப்பாளர்கள் ஆகியோர் இன்று காலை சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
விமானத்தின் உடைந்த பாகங்களை பரிசோதனை செய்ததோடு, dron ஆளில்லா விமானத்தின் உதவியுடன் அவர்கள், சம்பவ இடத்தை முழுமையாக சோதனையிட்டனர்.
12 பேர் அடங்கிய அக்குழுவினர், நேற்று காலை மலேசியா வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் மேற்கொண்டுள்ள விசாரணை குறித்து, மலேசிய அதிகாரத்துவ தரப்பு இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில், சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட விமானி அறையின் குரல் பதிவு மீதான விசாரணை முடிவடைய ஒரு வாரம் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.