கோலாலம்பூர், மார்ச் 3 – பேங்க் நெகாராவின் முன்னாள் கவர்னர் டாக்டர் Zeti
Akhtar Aziz சின் கணவர் Tawfiq Ayman னிடம் விசாரணை நடத்துவதற்காக எல்லையை கடந்து செல்வதற்கு சிங்கப்பூரின் அனுமதிக்காக காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் கோவிட் மற்றும் Omicron தொற்று அதிகரித்ததால் விசாரணையின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் Mohd Kamarudin Md Din தெரிவித்தார்.
சிங்கப்பூரில் தனக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 1 MDB பணத்தை Tawfiq Ayman பரிமாற்றம் செய்து கொண்டது குறித்து அவருக்கு எதிரான விசாரணையை கடந்த மார்ச் மாதம் போலீஸ் தொடங்கியது.